மாணவர்கள் காயம்
மதுரை: மதுரை வண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (நவ.,23) காலை 11:30 மணிக்கு 5 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் தண்ணீர் குடிக்க வகுப்பறை வராண்டா பகுதிக்கு வந்தனர். அப்போது திடீரென மேற்கூரை காரை பெயர்ந்து இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதனால் மாணவர்களுக்கு தலை, கையில் காயம் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் ஹெலன் தெரசா உடனே அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.