கராத்தே போட்டியில் சாதித்த மாணவியர்
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராசாஉயர்நிலைப்பள்ளி மாணவிகள் கராத்தே போட்டியில் சாதனை படைத்தனர்.உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அகில உலக கராத்தே சங்கம் சர்பில் சர்வதேச கராத்தே போட்டி நடந்தது. இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, துபாய் நாடுகளிலிருந்து பலர் பங்கேற்றனர்.மே 17ல் நடந்த போட்டியில் அழகர்கோவில் சுந்தரராசா உயர்நிலைப்பள்ளி மாணவி ஜீவிதா 2 பிரிவுகளில் தங்கம் வென்றார். 6ம் வகுப்பு மாணவி நந்திதா ஒரு பிரிவில் தங்கம், மற்றொரு பிரிவில் வெள்ளி வென்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இருவரும் தற்போது சர்வதேச போட்டியில் சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இருவரையும் தலைமை ஆசிரியர் செல்வராஜ், துணைக் கமிஷனர் யக்ஞ நாராயணன், கோயில் கண்காணிப்பாளர் பாலமுருகன் பாராட்டினர்.