உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உர மையங்கள் ஆய்வு

உர மையங்கள் ஆய்வு

மதுரை: வேளாண் துறையின் கீழ் மதுரை பழங்காநத்தத்தில் செயல்படும் கலவை உர (காம்ப்ளக்ஸ்) உற்பத்தி மையத்தை துணை இயக்குநர் ராணி ஆய்வு செய்தார். கலவை உரத்தில் கலக்கப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகியவை சரியான அளவு கலக்கப்பட்டுள்ளதா என மூலப்பொருட்களை ஆய்வு செய்தார். ராணி கூறுகையில் ‘‘விவசாயிகளுக்காக 3211 டன் யூரியா, 1521 டன் டி.ஏ.பி., 568 டன் பொட்டாஷ், 2370 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளது. அனைத்து மானியத் திட்டங்களிலும் பயன்பெற வேண்டு மெனில் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறவேண்டும். பதிவு செய்யாதவர்கள் முகாமில் பயன்பெறலாம்’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ