உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திட்டமிட்டு என்கவுன்டர் சுபாஷ் சந்திரபோஸ் தந்தை புகார்

திட்டமிட்டு என்கவுன்டர் சுபாஷ் சந்திரபோஸ் தந்தை புகார்

மதுரை : மதுரையில் நேற்றுமுன்தினம் போலீஸ் 'என்கவுன்டரில்' கொல்லப்பட்ட ரவுடி சுபாஷ் சந்திரபோஸ், போலீசாரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தை வீரபத்திரன் கூறினார்.நேற்று அவர் கூறியதாவது: வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து மகன் கையெழுத்திட்டு வந்தான். அப்போது கிளாமர் காளி கொலை நடந்துவிட்டதால் கைது செய்துவிடுவார்கள் என உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் கூறியதால் வெளியூரில் இருந்தார். ஆனால் திட்டமிட்டு என் மகனை வேறு இடத்தில் கொன்றுவிட்டு மதுரையில் 'என்கவுன்டர்' என்பது போல போலீசார் திட்டம் தீட்டியுள்ளனர்.போலீஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்காக எனது மகனை 'என்கவுன்டர்' செய்துள்ளனர். சுபாஸ் சந்திரபோஸ் திருந்தி வாழ்வதாக போலீசில் தெரிவித்த நிலையில் திருமண ஏற்பாடுகள் செய்தோம். அவன் தவறே செய்திருந்தாலும் காலில் சுட்டிருக்கலாம். எதற்காக கொல்ல வேண்டும். திட்டமிட்டு எனது மகனை கொலை செய்துவிட்டனர் என்றார்.இதற்கிடையே சுபாஷ்சந்திரபோைஸ போலீசார் துரத்திச்சென்றது, 'என்கவுன்டர்' செய்த விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றம், அவனியாபுரம், கீரைத்துறை ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் நேற்று மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் நேரில் விசாரித்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஏப் 02, 2025 15:36

காவலர்கள் திட்டமிட்டு கொலை செய்ததைத்தான் encounter என்பார்கள். நீதிபதிகள் கொடுத்தால் தூக்கு தண்டனை. சாதாரண மக்கள் செய்தால் கொலை . செயல் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு. உண்மைகள் வெளிவராமல் இருக்க அதிகாரமெடுத்து கொல்பவர்கள் கர்மாவுக்காக காத்திருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை