உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோட்டில் தேங்கும் மழைநீரால் அவதி

ரோட்டில் தேங்கும் மழைநீரால் அவதி

அலங்காநல்லுார்: சிக்கந்தர் சாவடி-- பொதும்பு ரோட்டில் கோவில்பாப்பாகுடி பிரிவு எதிரே ரோட்டில் மழைநீர் தேங்குகிறது. இந்த ரோட்டில் தினமும் பள்ளி, நிறுவனங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கோவில்பாப்பாகுடி பிரிவில் பயன்பாடின்றி பழுதடைந்த பஸ் ஸ்டாப் கட்டடம் விழும் அபாய நிலையில் உள்ளது. அதன் எதிரே ரோட்டின் தாழ்வான பகுதியில் சிறுமழைக்கே மழைநீர் நாள் கணக்கில் தேங்கி நிற்கிறது. அருகில் மர நிழல், மழை நீரின் குளிரால் ரோட்டை ஆக்கிரமித்து மாடுகளும் கூட்டமாக படுத்து அசை போடுகின்றன. இதனால் சாலை குறுகி வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்லும் போது நடந்து செல்வோர் மீது கழிவுநீர் தெறிக்கிறது, எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி