உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெருவிளக்கு இன்றி அவதி

தெருவிளக்கு இன்றி அவதி

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி சோழவந்தான் ரோடு, செங்குளம் கிழக்கு தெரு, செங்குளம் 1, 2, 3, ஆகிய தெருக்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன.இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள், துணைத் தலைவர் உள்ளிட்டோருக்கு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.இரவு நேரங்களில் வெளியில் செல்லவே அச்சம் ஏற்படும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகிகள் உடனடியாக தலையிட்டு தெரு விளக்கை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ