கோடை உழவு தீவிரம்
பேரையூர்: பேரையூர் பகுதியில் கோடை மழை கை கொடுத்ததை தொடர்ந்து உழவு பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இப்பகுதியில் சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் அறுவடை பணிகள் நிறைவடைந்த பின் வயல்களில் உழவுப் பணிக்கு ஈரப்பதம் இல்லாததால் உழவு செய்ய முடியாத நிலை இருந்தது. கடந்த வாரம் கோடை மழை பெய்தது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் உழவு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மண்வளம் மேம்படும் என்பதால் கோடை உழவு செய்வதாக தெரிவித்தனர்.