மேலும் செய்திகள்
வெப்பத்தை தணித்த கோடை மழை
02-May-2025
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு கோடை வெயில் தாக்கம் அதிகளவில் இருந்தது. காலை 8:00 மணிக்கே வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெப்பம் இருந்தது. சிறுவர்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டாலும், வெப்பத்தாலும், கொசுக்களின் தொந்தரவாலும் அனைத்துத் தரப்பினரும் அவதியடைந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை, இரவில் மழை பெய்து வருவதால் பூமி குளிர்ந்துள்ளது. வெப்பமும் தணித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
02-May-2025