கோடைகால பயிற்சி வகுப்பு
மதுரை; மதுரை தமுக்கத்தில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாமை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்.விடுமுறையில் மாணவர்கள் அலைபேசியில் முடங்கி விடாமல் நல்வழிப்படுத்துவது உட்பட பயனுள்ள வகையில் மாற்றுவதற்காக மாநகராட்சி கமிஷனர் சித்ரா உத்தரவில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் செஸ், கேரம், யோகா, தையல், ஓவியம் வரைதலில் பங்கேற்றனர். கமிஷனர் சித்ரா பார்வையிட்டு, மாணவர்களிடம் கலந்துரையாடினார். இன்றும் முகாம் நடக்கிறது.