வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தொடர்பு கொண்டு ட்ரம்ப் ஆட்டம் எப்போ அடங்கும்னு கேட்டு சொல்லலாமே
மேலும் செய்திகள்
'இறைவன் திருவடியை வணங்கினால் பாவம் தீரும்'
25-Jul-2025
மதுரை: ''கிரியா யோகம்மூலம் இறைவனோடு நேரடியாக தொடர்பு கொள்ளலாம்'' என மதுரையில் யோகதா சத்சங்க தியான கேந்திரா சார்பில் நடந்த கிரியா யோகம் குறித்த அறிமுக நிகழ்ச்சியில் மூத்த சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி பேசினார். அவர் பேசியதாவது: கிரியா யோகத்தை கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு வழங்கினார். கலியுகத்தில் மறைந்து போன அதனை, மஹா அவதார் பாபாஜி, பரமஹம்ஸ யோகானந்தர் மூலம் உலகிற்கு மீண்டும் வழங்கினார். கிரியா யோகம், மூட நம்பிக்கை இல்லாத ஓர் உயர்ந்த யோக விஞ்ஞான வழிமுறை. இனம், மொழி கடந்து அனைவரும் பின்பற்றலாம். இறைவனை அடைவது ஒவ்வொருவரின் பிறப்புரிமை. இந்த யோகத்தின் மூலம் இல்லறத்தானும் இறைவனுடன் இணைந்திருக்க முடியும். உடல் உபாதை, மன அழுத்தம், ஆன்மிக அறியாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, ஆனந்தமயமான இறைவனோடு தொடர்பில் இருப்பதே இதன் முக்கிய நோக்கம். உடலை ஆரோக்கியமாக வைத்தல், சலனமில்லாமல் மன சக்திகளை ஆக்கப்பூர்வமான விஷயங்களில் செலுத்துதல், தீய உணர்ச்சிகளை உணர்ந்து அவற்றை நன்மைகளாக மாற்றுதல், நேரடி ஆன்மிக அனுபவம் பெறுதல் இந்த யோக முறை மூலம்பெற முடியும். இதனைத்தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் அமைதியை பெற முடிகிறது. அதைத் தொடர்ந்து ஞானம் எனும் புரிதல் கிட்டும். பின் அன்பு பெருகி நமக்குள்ளேயே ஆனந்த நிலையை அடைய முடியும். இத்தகைய யோக முறையை கற்று, இறைவனுடன் தொடர்பில் இருந்தவாறே கடமைகளை பற்றில்லாமல் தவறாது செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். கேந்திரா சார்பில் காமராஜர் ரோடு வி.எஸ்.செல்லம் செஞ்சுரி ஹாலில் 3 நாள் கிரியா யோக தியான பயிற்சி வகுப்பு இன்று (ஆக., 8) முதல் நடக்கிறது. விபரங்களுக்கு 89253 91014ல் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு கொண்டு ட்ரம்ப் ஆட்டம் எப்போ அடங்கும்னு கேட்டு சொல்லலாமே
25-Jul-2025