உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டேபிள் டென்னிஸ் போட்டி

டேபிள் டென்னிஸ் போட்டி

மதுரை, : மதுரை எல்லீஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி மதுரையில் நடந்தது. ஒன்று முதல் ஐந்து வரை, ஆறு முதல் பிளஸ் 2 வரையான 90 பேர் போட்டிகளில் பங்கேற்றனர்.1--5ம் வகுப்பு வரையான மகளிர் பிரிவு போட்டியில் ஜீவனா பள்ளி ரக் ஷிதா 3 - 0 புள்ளிகளில் ஜீவனா பள்ளி ஹரிணியை வீழ்த்தினார். ஆடவர் பிரிவில் செவன்த்டே பள்ளி சபரீஷ் 3 - 0 புள்ளிகளில் ஜீவனா பள்ளி தக்ஷினை வீழ்த்தினார். பிளஸ் 2 வரையான மகளிர் பிரிவில் ஜீவனா பள்ளி வினியா 3 - 0 புள்ளிகளில் கே.ஏ.சி.ஏ. பள்ளி சம்ருணி பாத்திமாவை வீழ்த்தினார். ஆடவர் பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி சந்தோஷ்குமார் 3 - 0 புள்ளிகளில் செவன்த்டே பள்ளி சபரீைஷ வீழ்த்தினார். பா.ஜ. நிர்வாகி ராஜ்குமார், அகாடமி நிறுவனர் சுந்தர், செயலாளர் பாலகிருஷ்ணன் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை