டேக்வாண்டோ போட்டி
மதுரை: மலேசியாவில் ஸ்பீடு பவர் கிளப் சார்பில் டத்தோ பாலா தலைமையில் சர்வதேச டேக்வாண்டோ போட்டி நடந்தது. 8 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் மதுரை நாகமலை புதுக்கோட்டை விகாசா பிராகரசிவ் பள்ளி மாணவர் சாய் விகுந்த் 11 வயது பும்சே பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். முதுநிலை முதல்வர் சுதாகரன், முதல்வர் ஆறுமுகம், மாவட்ட டேக்வோண்டோ சங்க செயலாளர் நாகராஜ் பாராட்டினர்.