டேக்வாண்டோ போட்டி
மதுரை: மதுரை மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி பரவை மங்கயர்க்கரசி கல்லுாரியில் நடந்தது. இதில் ரைசிங் சாம்பியன்ஸ் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.சப்ஜூனியர் பிரிவில் கவின் நரசிம்மன், நந்திதா தங்கப்பதக்கம், ரித்திக்ஸ்வர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். கேடட் பிரிவில் ஜீவிதா, இசைவாணி, சாதனா, ஹரிஷ்பாண்டி, கவி சந்தோஷ் தங்கம், யோகேஷ் வெள்ளி வென்றனர். தர்ஷினி, தக்ஷிம், ஆதிதேவ், ஜீவிதா வெண்கல பதக்கம் வென்றனர்.ஜூனியர் பிரிவில் விக்னேஸ்வரன், விஷ்ணு, பாலமுருகன், தங்கம் சீனியர் பிரிவில் கார்த்திகேயன், ராம்ராஜ் தங்கம் மதன் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.அம்பிகை நாராயணன் விளையாட்டு வளாகத்தலைவர்கள் சுந்தரகண்ணன், சரவணன், பயிற்சியாளர் கவுரிசங்கர் வாழ்த்தினர்.