உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ரயில்வே ஸ்டேஷனை கொஞ்சம் பாருங்க... பராமரிங்க... பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்துங்க

மதுரை ரயில்வே ஸ்டேஷனை கொஞ்சம் பாருங்க... பராமரிங்க... பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்துங்க

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை 1ல் உள்ள பல அறிவிப்பு டி.வி க்கள் செயல்பாடின்றி இருப்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.தமிழகத்தின் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் மதுரையும் ஒன்று. இங்கு தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பிரதமர் மோடி செப். 1ல் புதிதாக அறிமுகப்படுத்திய பெங்களூரு --- மதுரை, சென்னை - -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களால் பயணிகள் தற்போது கூடுதலாக ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.நீண்டதுாரம் செல்லும் பெரும்பாலான ரயில்கள் பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஸ்டேஷனின் முதல் நடைமேடையில் நின்று செல்கின்றன. ஆனால் இந்த நடைமேடையின் பல இடங்களில் 'கோச்' நிற்கும் இடங்களை காட்டும் 'டிஸ்பிளேக்'கள் செயல்பாடின்றி உள்ளன. இதனால் பயணிகள் 'கோச்' வரும் நேரம், நிற்கும் இடம் தெரியாமல் தவிக்கின்றனர். இந்த விவரங்களை ரயில்வே ஊழியர்களை தேடி கண்டுபிடித்து கேட்கின்றனர்.பயணிகள் உட்காரும் இருக்கைகள் பல சேதமடைந்துள்ளன. சில இருக்கைகளை 'செங்கலால்' முட்டு கொடுத்து பயணிகள் உட்கார ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் பயணிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. நடைமேடை ஆங்காங்கே சேதமடைந்து 'மதுரை மாநகராட்சி ரோடுகள்' போல காட்சியளிக்கின்றன. அவற்றை விரைந்து சரிசெய்ய வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சாண்டில்யன்
செப் 24, 2024 23:24

செங்கல் முட்டுக்கொடுத்த இருக்கைகளா? அதென்ன மோடி வைத்த செங்கல்லா இருக்குமோ இதற்கும் முட்டுக் கொடுக்க நாலு அதி புத்திசாலிகள் ஓடிவாருவார்களே சுமார் ஐநூறு கோடியில் உலக உலக்கை? தரத்திற்கு மேம்படுத்தப்படுகிறதாக பல பல போட்டோ வீடியோ எல்லாம் போட்டார்கள் TV டிஸ்பிளே கோச் பொசிஷன் வரலைன்னா ரயில்வே எப்படி பொறுப்பாகும் ஒப்பந்ததாரரிடம் கேட்டுக்கோங்க என்பார்கள் இந்த அவல நிலைகளெல்லாம் சரி செய்யப்பட்டு “2047 இல் வளர்ந்த பாரதம் வலிமையான பாரதம்” காண காத்திருக்கவும்


amutha paranthaman
செப் 23, 2024 14:20

Please improve battery car assistance. Elderly people and differently abled people are suffering a lot.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை