மேலும் செய்திகள்
நாமக்கல்லில் கூட்டுறவு பணியாளர் நாள் நிகழ்ச்சி
14-Sep-2025
மதுரை: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில் போராட்ட அறிவிப்பு குறித்த மதுரை மற்றும் விருதுநகர் தென்மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. மாநில கவுரவ பொதுச் செயலாளர் குப்புசாமி தலைமையில் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ரேசன் கடையில் ப்ளூடூத் மூலம் பொருட்கள் வழங்குவதில் உள்ள பிரச்னைகளை களையும் வரை இந்த முறையை கைவிடுவது, ஊதிய உயர்வுக்கு அனுமதித்து இரண்டாண்டுகளாகியும் காலதாமதம் செய்வதை கண்டிப்பது உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 6 ல் அந்தந்த மாவட்ட கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன் போராட்டமும், அக்., 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. நிர்வாகிகள் செந்தில்குமார், முத்துப்பாண்டியன், செல்லமுத்து, திருச்சிற்றம்பலம், ஆசிரியதேவன், ராஜா, கணேசன், பாரூக் அலி, மதியழகன், முருகன், மகேந்திரன், நீதிமுத்தையா பங்கேற்றனர்.
14-Sep-2025