மேலும் செய்திகள்
ஜெய்ப்பூர் கலை திருவிழா தமிழக கலைஞர்கள் அசத்தல்
23-Oct-2024
மதுரை: மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம், அப்பர் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.'சமகால நிகழ்த்துக் கலைகளில் கிராமியப் பெண்கள் கும்மி' என்ற தலைப்பில் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். கும்மியாட்டப் பயிற்றுநர்கள் ஐயப்பன், பார்த்தசாரதி ஆகியோர், பல வகை கும்மியாட்ட முறைகளை விவரித்து மாணவர்களுக்கு பயிற்றுவித்தனர்.இக்கலையை மகிழ்ச்சி, உற்சாகம், பொழுதுபோக்கிற்காக 10 வயது முதல் 60 வயதுடையோர் 10க்கும் மேற்பட்ட வடிவங்களில் நிகழ்த்தலாம். சமூக சிக்கலை தாண்டி பல கிராமங்களில் இன்றும் பெண்கள் நிகழ்த்துகின்றனர். சில கலைகள் விளிம்பு நிலையில் உள்ளது. இவற்றை மீட்டெடுக்கும் பொறுப்பு அக்கலைஞர்களுக்கும், கலை விரும்பிகளுக்கும் உண்டு. இதுபோன்ற நிகழ்ச்சியே அதற்கு சான்று. நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்தார். ஆய்வு வளமையர் ஜான்சிராணி, ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தனர்.
23-Oct-2024