உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ்க் கூடல் நிகழ்வு

தமிழ்க் கூடல் நிகழ்வு

மதுரை:மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. ஆய்வுவள மையர் ஜான்சிராணி வரவேற்றார். யாதவர் மகளிர் கல்லுாரி உதவிப்பேரா சிரியர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். சாத்துார் ராமசாமி நினைவுக் கல்லுாரி தமிழ் துறைத் தலைவர் ஸ்ரீதேவி 'பரிபாடல் காட்டும் மக்கள் வாழ்வியல்' எனும் தலைப்பில் பேசுகையில், உலகின் தோற்றம் குறித்தும், மக்களின் நீராடலையும் பதிவு செய்த பெருமை பரி பாடலையே சேரும். மக்களின் வாழ்வியல் செய்திகள் பரிபாடலில் கொட்டிக்கிடக்கின்றன என்றார். தமிழ் சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா வழிகாட்டுதலில் சங்கமும், யாதவர் கல் லுாரியும் செய்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !