உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீர்தேக்க தொட்டி சீரமைப்பு

நீர்தேக்க தொட்டி சீரமைப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மேட்டுத் தெரு தரைமட்ட நீர் தேக்க தொட்டி ரூ. 67 லட்சத்தில் சீரமைக்கும் பணி துவங்கியது.மேயர் இந்திராணி பொன் வசந்த் துவக்கி வைத்தார். துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சுவிதா, உதவி கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர்கள் பங்கேற்றனர்.சுவிதா கூறுகையில், ''வைகை ஆற்றில் சித்தையாபுரம் பகுதியிலிருந்த இத்தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு திருப்பரங்குன்றத்தின் ஒரு பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்ததால் முழுவதும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.முதல் கட்டமாக 9 லட்சம் லிட்டர் பகுதி ஏற்கனவே சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.தற்போது இரண்டாம் கட்ட பணிகள் துவங்கியுள்ளன.தண்ணீர் தொட்டி அமைந்துள்ள பகுதி முழுவதும் சுற்றுச்சுவர் கட்டவும், தரைத்தளம் அமைக்கவும் கூடுதல் நிதி ஒதுக்க மேயரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை