வாசகர்கள் கருத்துகள் ( 3 )
First help of Tadhco Agri EB SCHEMES as do?????
ஆ ராசா 2 G வேலைதான் இங்கேயும் நடந்திருக்கும்
விவசாயம் லாபம் இல்லை என்று கூறுவது தவறு என்று புரிகிறது
மேலுார்: விவசாய மின் இணைப்புக்கு தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க அறிவித்த மறுநாளே முடிந்து விட்டதாகக்கூறி அதிகாரிகள் 'வரைவோலை' (டிமாண்ட் டிராப்ட்) வாங்க மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் தட்கல் திட்டத்தில் மதுரை கோட்டத்திற்கு 1669 மின் இணைப்புகள் வழங்க அனுமதி அளித்தது. இத் தகவல் டிச.17 வெளிவந்தது. டிச. 18 மேலுார் விவசாயிகள் கிழக்கு மின்வாரிய அலுவலகத்திற்கு வரைவோலையுடன் சென்றபோது அதிகாரிகள் வாங்க மறுத்து விட்டனர். விவசாயி ராம்தாஸ் கூறியதாவது: தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க ஒவ்வொரு விவசாயியும் ரூ.2.50 லட்சத்திற்கு சிரமப்பட்டு 'டிடி' எடுத்தோம். நேற்று மதுரை கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் கொடுக்க சென்றபோது 'முடிந்து விட்டது' என்று கூறி அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். கடன் வாங்கி நேரத்தை செலவிட்டு டிடியுடன் சென்றால் அலைக்கழிக்கப்படுகிறோம். தமிழக அரசு தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்றார். மின் செயற்பொறியாளர் கண்ணன் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் இந்தாண்டுக்கு பத்தாயிரம் விவசாய இணைப்புகளுக்கு விண்ணப்பம் பெற அரசு அறிவித்தது. அதனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் இணையதளம் செயல்பட துவங்கியது. நேற்று முன்தினம் காலையுடன் பத்தாயிரம் மனுக்கள் பெறப்பட்டதால் மற்ற விவசாயிகளிடம் மனுக்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது என்றார்.
First help of Tadhco Agri EB SCHEMES as do?????
ஆ ராசா 2 G வேலைதான் இங்கேயும் நடந்திருக்கும்
விவசாயம் லாபம் இல்லை என்று கூறுவது தவறு என்று புரிகிறது