உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அளவெடுப்பதாக டெய்லர் அட்டூழியம்

அளவெடுப்பதாக டெய்லர் அட்டூழியம்

மதுரை: மதுரை, எம்.கே.புரம் தனியார் பள்ளியில் சீருடைக்கு அளவெடுக்கும் பணி நடந்து வருகிறது. தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த பாரதிமோகன், 62, அவரது சகோதரி மதுரை எல்லீஸ்நகர் கலாதேவி, 60, ஆகியோர் அளவு எடுத்தனர். பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அளவு எடுத்தபோது தன்னை டெய்லர், தவறாக 'டச்' செய்ததாக ஆசிரியையிடம் கூறினார். இதுகுறித்து, பெற்றோரிடமும் அவர் கூற, மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.விசாரணையின் போது, டெய்லர் நடவடிக்கை குறித்து உடன் இருந்த பெண், ஆசிரியையிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டிக்கவில்லை என, மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பாரதிமோகன், கலாதேவி, ஆசிரியை மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை