உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மலைப்பாம்பை வளர்த்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டி.டி.எப். வாசன்

மலைப்பாம்பை வளர்த்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டி.டி.எப். வாசன்

மதுரை : சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற பிரபல யூடியுபர் டி.டி.எப். வாசன் மலைப்பாம்பை வளர்த்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்து பலரையும் ஈர்த்தவர் வாசன். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டி 'வீலிங்' செய்தபோது விபத்தில் சிக்கினார். கைதும் செய்யப்பட்டார். பின்னர் சென்னையில் இருந்து மதுரை வழியாக சென்றபோது அலைபேசி பேசியவாறே கார் ஓட்டிய வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், திருப்பதி கோயிலுக்கு சென்றபோது பக்தர்களை 'பிராங்க்' செய்யும் வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.இந்நிலையில் 'பப்பி' என்று பெயரிட்டு 2 வயது சிறிய மலைப்பாம்பை 'பெட்' ஆக வளர்த்து வருவதை வீடியோவாக வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இதுகுறித்து அவரது வழக்கறிஞர்கள் அய்யப்பராஜா, முருக கணேசன் தரப்பில் நமது நிருபரிடம் கூறியதாவது:பாம்பு வளர்ப்பதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளார். பாம்பை சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் வாங்கியுள்ளார். இப்பாம்பு நைஜீரியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கேரளாவில் விற்கப்பட்டது. அங்கிருந்து சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் வாங்கி, கோவை 'பெட்' ஷாப்பில் விற்றுள்ளார். அங்கிருந்தே வாசன் முறைப்படி ஆவணங்களுடன் வாங்கியுள்ளார். போலீசார் சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறார் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை