உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிரியர், அலுவலர் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர், அலுவலர் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம்: டி.என்.பி.சி.ஆர். ஆக்ட் 1976ல் சட்ட திருத்தம் கொண்டுவரப்படுவதை கண்டித்தும், அரசு உதவி பெறும் கல்லுாரிகளை தனியார் பல்கலையாக மடைமாற்றம் செய்யும் சட்ட முன் வடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் திருப்பரங்குன்றத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். மதுரை காமராஜ் பல்கலை ஆசிரியர் சங்க முன்னாள் மாநில இணைப் பொதுச் செயலாளர் ராம்மோகன் நிறைவுறையாற்றினார். அரசு சொத்தை தனியார் சொத்தாக்க துடிக்கும் அரசே, தனியார் பல்கலை வரைவு சட்டத்தை திரும்ப பெறு, உயர்கல்வியை பாதிக்கும் தனியார் பல்கலை திருத்த மசோதாவை உடனே வாபஸ் வாங்கு என கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி