உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சம்பளமின்றி ஆசிரியர்கள் தவிப்பு

சம்பளமின்றி ஆசிரியர்கள் தவிப்பு

மதுரை: மதுரையில் வடக்கு கல்வி ஒன்றியத்துக்குட்பட்டு 110க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவற்றில் உதவி பெறும் பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மார்ச் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கும் மேலாகியும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் இதுவரை சம்பளம் கிடைக்கவில்லை.ஆசிரியர்கள் கூறுகையில், 'வழக்கம் போல் சம்பள பில்கள் அனைத்தும்கருவூலத்திற்கு உரிய முறையில் பள்ளிகளில் இருந்து அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை கிடைக்கவில்லை. இதுகுறித்து கருவூல அதிகாரிகளிடம் கேட்டால் நிதியில்லை என கூறுகின்றனர். கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட சில பள்ளிகளில் சம்பள பில்களை கருவூலத்தில் சமர்ப்பிப்பதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இம்மாத சம்பளத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்து ஒருவாரத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி