உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சியில் பணி மறு நியமன உத்தரவு; ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மாநகராட்சியில் பணி மறு நியமன உத்தரவு; ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை : மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் பட்சத்தில் கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை அவர்களுக்கு பணி மறுநியமன உத்தரவு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது: மாணவர்கள் நலன் கருதி கல்வியாண்டின் இடையே ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் அக்கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன உத்தரவு வழங்குவது நடைமுறையில் உள்ளது. ஆனால் மாநகராட்சியில் இந்த உத்தரவு பின்பற்றப்படுவதில்லை. இது மாணவர்களை பாதிக்கும். எனவே நடப்பு கல்வியாண்டு முதல் இந்த உத்தரவை மாநகராட்சி நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை