உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிரியர் நுாதன போராட்டம்

ஆசிரியர் நுாதன போராட்டம்

மதுரை : மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் செல்லத்துரை. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் இவரது 8 ஏக்கர் நிலத்தை தொழிற்பேட்டை அமைக்க 2020ல் அரசு கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடு தொகை ரூ.63 லட்சம் வழங்கவில்லை என அம்மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார்.இதுவரை வழங்கப்படாததால் நேற்று மதுரை கலெக்டர் அலுவல வாசலில் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ