உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆசிரியர்கள் வேண்டுகோள்

 ஆசிரியர்கள் வேண்டுகோள்

மதுரை: தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இளங்கோ கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்.23 ல் நடக்கிறது. இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஏப்.22 ல் ஆணைகளை பெற்று அன்றே தேர்தல் நடைபெறும் ஓட்டுச்சாவடிக்கும் சென்று தேர்தல் பணியை துவக்குவர். ஏப். 23 ல் ஓட்டுப்பதிவு பணிகளை முடித்து கணக்குகளையும், இயந்திரங்களையும் முறைப்படி ஒப்படைத்து வீடுதிரும்ப ஏப்.24 ம் தேதி அதிகாலை நேரமாகிவிடும். பல்வேறு மலைப்பாங்கான இடத்திலும், பஸ்வசதி இல்லாத இடங்களிலும் இருந்து வீடுதிரும்ப காலதாமதமாகும். அதேநாளில் ஏப்.24 ல் பள்ளி வேலைநாளாக அறிவித்து உள்ளனர். இது ஆசிரியர்களுக்கு கடினமான சூழலை ஏற்படுத்தும். எனவே ஏப்.24 ம்தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை