படைப்புழு மேலாண்மை பயிற்சி
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் காண்டை கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை பயிற்சி நடந்தது. நிலையத் தலைவர் சுரேஷ் பேசியதாவது: ஆண் அந்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கும் இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 4, 5 எண்ணிக்கையில் வைக்க வேண்டும். புழு தாக்குதல் அதிகம் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் 4 கிராம் எமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி., அல்லது 4 மில்லி குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 எஸ்.சி., அல்லது 5 மில்லி ஸ்பைனிட்டோரம் 11.7 சதவீத எஸ்.சி., கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார். வேளாண் மானியத்திட்டம், விவசாய அடையாள அட்டை பெறுவது குறித்து உதவி இயக்குநர் மயில், வேளாண் அலுவலர் நரேஷ்குமார் விளக்கினர்.