மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கண்ணீர் மல்க விவசாயி புகார்
மதுரை: வாடிப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் , அரசு பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வதாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாடிப்பட்டி விவசாயி சீதாராமன் கலெக்டர் சங்கீதாவிடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார். வாடிப்பட்டியில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக உள்ளது. தேர்வு முடிந்து வீடு திரும்பும் மாணவிகளை குறிப்பிட்ட இடத்தில் நின்று மாணவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் மனநலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கலெக்டர் , எஸ்.பி. அரவிந்திடம் போனில் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தேர்வுகள் முடியும் வரை போலீசார் அங்கிருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.