உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழில்நுட்ப சேவை தேர்வு 3125 பேர் ‛ஆப்சென்ட்

தொழில்நுட்ப சேவை தேர்வு 3125 பேர் ‛ஆப்சென்ட்

மதுரை : டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப சேவைக்கான தேர்வு மதுரையில் 21 மையங்களில் நேற்று நடந்ததில் 53 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.விண்ணப்பித்தவர்களில் 5989 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. நேற்று 2864 பேர் தேர்வெழுதினர். 3125 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.வழக்கமாக தேர்வெழுதுவோர் சதவீதம் அதிகமாகவும் வராதவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கும். இதற்கு மாறாக நேற்று 47 சதவீதம் பேர் மட்டுமே தேர்வெழுதினர். 'ஆப்சென்ட்' ஆனவர்கள் 53 சதவீதம் பேர். மதுரையில் நேற்று முன்தினம் கனமழை பெய்ததால் மாநகராட்சி விரிவாக்க பகுதி குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது. தேர்வெழுதுவோர் எண்ணிக்கை குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தேர்வு நடந்த 21 மையங்களிலும் பாதிக்கும் மேற்பட்டோர் தான் தேர்வெழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை