வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மதுரை மக்களுக்கு பொறுப்பு உண்டு
இன்று காஞ்சிபுரம் காமாச்சி அம்மன் கோவில் கோபுரம் உள்ளே பட்டாசு சரவெடி .......
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி பாதுகாப்பு கருதி பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இக்கோயில் கும்பாபிேஷக திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சித்திரை வீதிகளில் உள்ள பெரிய கோபுரங்களில் மூங்கில் சாரங்கள் அமைக்கப்பட்டு, திரைச்சீலையால் மூடப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்று(அக்.31) கோயில் அருகில் உள்ள ஆவணி மூல வீதி பகுதிகளில் குடியிருப்போர் பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை வெடிக்கும்பட்சத்தில் அது கோயில் கோபுர சாரங்கள், தீரைச்சீலை மீது பட வாய்ப்புள்ளதால் அவ்வகை பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று தங்க கவசம்
தீபாவளி சிறப்பு தரிசனமாக இன்று காலையும், மாலையும் மூலஸ்தான அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கீரிடம், சுவாமி சுந்தரேஸ்வரருக்கு வைர நெற்றி பட்டையும் அணிவிக்கப்படுகிறது. நவ.,2 முதல் கோலாட்ட உற்ஸவம் தொடங்குகிறது.
மதுரை மக்களுக்கு பொறுப்பு உண்டு
இன்று காஞ்சிபுரம் காமாச்சி அம்மன் கோவில் கோபுரம் உள்ளே பட்டாசு சரவெடி .......