மதுரை மகாலில் லேசர் லைட்டிங் ஷோ டெண்டர் விண்ணப்பம் துவங்கியது
மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் 'லேசர் லைட்டிங் ஷோ' அமைப்பதற்கான டெண்டர் விடும் பணி துவங்கியது.மகால் முன்புறமுள்ள தர்பார் ஹாலில் திருமலை நாயக்க மன்னரின் வாழ்க்கை வரலாற்றை ஒலி ஒளி காட்சியாக தமிழ், ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. விடுமுறை இல்லாததால் மழை பெய்தால் மட்டுமே ஷோ தடைபடும். இந்நிலையில் தர்பார் ஹாலின் தரைத்தள கற்கள் சேதமடைந்ததால் அவற்றை பழமை மாறாமல் சீரமைக்க ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. ஹாலின் உட்புற வயரிங் பணிகள் பாதிக்கப்பட்டதால் ஒலி ஒளி காட்சி நிறுத்தப்பட்டது. தற்போது ஹால் புதுப்பிக்கப்பட்டு மழைநீர் வடிகால் சரிசெய்த நிலையில் 3டி வடிவில் 'லேசர் லைட்டிங் ஷோ' அமைக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.இதுவரை மன்னரின் வரலாற்றை ஆடியோ வடிவில் கேட்டு வந்த சுற்றுலா பயணிகள் இனி 3டி வடிவில் வீடியோ காட்சிகளாக நவீன லேசர் ஒளியுடன் பார்க்க முடியும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இதற்கான டெண்டர் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி ஜூன் 6 ல் துவங்கியது. ஆக.1 ல் இ - டெண்டர் மூலம் லேசர் ஒலி ஒளி காட்சி அமைக்கும் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்தாலும் செப்டம்பர் முதல் உள்ளூர், வெளிமாநில, வெளிநாட்டு பயணிகள் எதிர்பார்த்த திருமலை நாயக்க மன்னரின் வாழ்க்கை வரலாற்று லேசர் லைட்டிங் ஷோ துவங்கிவிடும்.