உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாட்டுத்தாவணி மார்க்கெட் பார்க்கிங் கட்டண வசூல் டெண்டர் வாபஸ்

மாட்டுத்தாவணி மார்க்கெட் பார்க்கிங் கட்டண வசூல் டெண்டர் வாபஸ்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் வாகன நிறுத்த கட்டண வசூல் டெண்டர் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் தாக்கல் செய்த பொதுநல மனு: மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி, பழ மார்க்கெட்டில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க டெண்டர் அறிவிப்பை மாநகராட்சி கமிஷனர் 2024 நவ.25 ல் வெளியிட்டார். அறிவிப்பிற்கு பின்தான் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விதிகளை பின்பற்றவில்லை.வாகனங்கள் நிறுத்த தனி இடவசதி இல்லை. ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துகின்றனர். தனியார் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கினால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கட்டணம் நிர்ணயிப்பர். டெண்டர் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். முறையாக ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். டிச.10ல் விசாரணையின்போது இரு நீதிபதிகள் அமர்வு, 'டெண்டர் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.மாநகராட்சி தரப்பு: டெண்டர் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள்: மனு காலாவதியாகிவிட்டது. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ