மேலும் செய்திகள்
பளு துாக்குதல் போட்டி
23-Sep-2025
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான பாரதியார் தின விழா டென்னிஸ், பால் பாட்மின்டன் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம், ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்தன. ஆடவர் டென்னிஸ் போட்டி 14 வயது, 19 வயதுக்குட்பட்ட ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் சி.இ.ஓ.ஏ., பள்ளி முதலிடம், தியாகராஜர் மாடல் பள்ளி 2ம் இடம், மகாத்மா மாண்டிசோரி பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் மங்கையர்க்கரசி பள்ளி முதலிடம், செயின்ட் ஜோசப் பள்ளி 2ம் இடம், சி.இ.ஓ.ஏ., பள்ளி 3ம் இடம் பெற்றன. 14 வயது டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சி.இ.ஓ.ஏ., பள்ளி முதலிடம், ஸ்ரீ அரபிந்தோ மீரா பள்ளி 2ம் இடம், தியாகராஜர் மாடல் பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் மகாத்மா மாண்டிசோரி முதலிடம், தியாகராஜர் மாடல் பள்ளி 2ம் இடம், சி.இ.ஓ.ஏ., பள்ளி 3ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் சி.இ.ஓ.ஏ., பள்ளி முதலிடம், தியாகராஜர் மாடல் பள்ளி 2ம் இடம், மகாத்மா மாண்டிசோரி பள்ளி 3ம் இடம் பெற்றன. மகளிர் டென்னிஸ் போட்டி டென்னிஸ் ஒற்றையர் 14 வயது பிரிவில் மகாத்மா மாண்டிசோரி முதலிடம், மேரி இமாகுலேட் பள்ளி 2ம் இடம், சவுராஷ்டிரா பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் டி.வி.எஸ். பள்ளி முதலிடம், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி 2ம் இடம், மகாத்மா மாண்டிசோரி பள்ளி 3ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் டி.வி.எஸ். பள்ளி முதலிடம், செயின்ட் ஜோசப் பள்ளி 2ம் இடம், சி.இ.ஓ.ஏ., பள்ளி 3ம் இடம் பெற்றன. டென்னிஸ் இரட்டையர் 14 வயது பிரிவில் மகாத்மா பள்ளி முதலிடம், சவுராஷ்டிரா பள்ளி 2ம் இடம், செயின்ட் ஜோசப் பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது இரட்டையர் பிரிவில் சி.இ.ஓ.ஏ., பள்ளி முதலிடம், ஸ்ரீ பாலன் எவர்கிரீன் பள்ளி 2ம் இடம், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி 3ம் இடம் பெற்றன. 19 வயது இரட்டையர் பிரிவில் சவுராஷ்டிரா பள்ளி முதலிடம், செயின்ட் ஜோசப் பள்ளி 2ம் இடம், சி.இ.ஓ.ஏ., பள்ளி 3ம் இடம் பெற்றன. பால் பாட்மின்டன் போட்டி 14 வயது மகளிர் பிரிவு பால் பாட்மின்டன் போட்டியில் ஓ.சி.பி.எம்., பள்ளி முதலிடம், செயின்ட் ஜான் பள்ளி 2ம் இடம், நிர்மலா பள்ளி 3ம் இடம் பெற்றன. 17 வயது மகளிர் பிரிவு பால் பாட்மின்டன் போட்டியில் ஓ.சி.பி.எம்., பள்ளி முதலிடம், லட்சுமி பள்ளி 2ம் இடம், நிர்மலா பள்ளி 3ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் ஓ.சி.பி.எம்., முதலிடம், நிர்மலா பள்ளி 2ம் இடம், ஹோலி பேமிலி பள்ளி 3ம் இடம் பெற்றன.
23-Sep-2025