மேலும் செய்திகள்
நவராத்திரி விடுமுறை கால சிறப்பு ரயில்கள்
06-Oct-2024
மதுரை : நவராத்திரி, தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழநி வழியாக கோயம்புத்துாருக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.தாம்பரம் -- கோயம்புத்துார் சிறப்பு ரயில் (06184) அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:10 மணிக்கு கோயம்புத்துார் செல்லும். மறு மார்க்கத்தில் கோயம்புத்துார் -- தாம்பரம் சிறப்பு ரயில் (06185) அக்டோபர் 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்புத்துாரில் இருந்து இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் செல்லும்.இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்களில் நிற்கும்.இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நடந்து வருகிறது.
06-Oct-2024