உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அறுபடை வீடு கண்காட்சி நாளை முதல் பார்க்கலாம்

அறுபடை வீடு கண்காட்சி நாளை முதல் பார்க்கலாம்

மதுரை:மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அமைக்கப்படும் அறுபடை வீடு மாதிரி கண்காட்சியை, நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.மதுரை, வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில், ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள், மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட்டு வருகிறது.ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் கூறியதாவது:அறுபடை வீடுகளின் மாதிரி கண்காட்சி அமைக்கும் பணி ஜூன், 15 இரவுக்குள் முடிக்கப்படும். பூஜை, ஜூன் 16 காலை, 9:00 மணிக்கு தொடங்கும். ஜூன், 22 வரை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !