உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி சிறுவன் பாதிப்பு; இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

மின்சாரம் தாக்கி சிறுவன் பாதிப்பு; இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடியபோது சிறுவன் பந்தை பிடிக்க முயன்று மின்ஒயரில் கை பட்டு மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்டதற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனு: எனது 10 வயது மகன் ஒரு பள்ளியின் பின்புறம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். ​​உயரழுத்த மின் கம்பி தாழ்வாக தொங்கியது. மகன் பந்தை பிடிக்க முயன்றபோது, ​வலது கை மின்ஒயரில் பட்டது. அவரது வலது கை, வலது காலில் காயம் ஏற்பட்டது. மின்வாரியத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியமே காரணம். மகனுக்கு 2 முறை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. வலது கை பகுதியில் நிரந்தர ஊனம் ஏற்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக உள்துறை செயலர், மின்வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: தேவையான அனுமதியுடன் உயரழுத்த மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் மகன் கவனக்குறைவாக இரும்பு குழாயால் ஒயரின் உயரத்தை அதிகரிக்க முயன்றதால் சம்பவம் நடந்துள்ளது. விபத்திற்கு மின்வாரியத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனக்குறைவு இல்லை. மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ