மேலும் செய்திகள்
புது டவுன் பஸ்களில் வெடிக்கும் பழைய டயர்
12-Oct-2024
கூடுதல் பஸ் இயக்கணும்
29-Oct-2024
திருநகர் : திருமங்கலம் டூ மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டுக்கு விளாச்சேரி வழியாக டவுன் பஸ்கள் இயக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.விளாச்சேரியில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. முன்பு அண்ணாநகர், திருநகரில் இருந்து விளாச்சேரி வழியாக கிருஷ்ணாபுரம் காலனிக்கு இயங்கிய டவுன்பஸ்கள் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டன. விளாச்சேரியில் இருந்து கப்பலுார் தொழிற்பேட்டை உட்பட பல பகுதிகளுக்கும் ஏராளமானோர் வேலைக்கு செல்கின்றனர். பள்ளி, கல்லுாரிகளுக்கும் பலநுாறு மாணவர்கள் செல்கின்றனர். பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் ஏராளமானோர் விளாச்சேரிக்கு வருகின்றனர்.போதுமான பஸ் வசதி இல்லாததால் இவர்கள் திருநகர் 3வது பஸ்ஸ்டாப், மூலக்கரைக்கு ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். அதில் புளிமூடையாக அடைத்தபடி பொதுமக்களை ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்கின்றனர். ஆட்டோக்களில் செல்ல வழியில்லாதோர் பல கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே விளாச்சேரி வழியாக மாட்டுத்தாவணிக்கும் திருமங்கலத்திற்கும் காலை மாலை வேளைகளில் கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
12-Oct-2024
29-Oct-2024