உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயிலில் வி.ஐ.பி., வழியில் துாய்மை பணியாளர்கள் தரிசனம் கவுரப்படுத்திய மாநகராட்சி கமிஷனர்

குன்றத்து கோயிலில் வி.ஐ.பி., வழியில் துாய்மை பணியாளர்கள் தரிசனம் கவுரப்படுத்திய மாநகராட்சி கமிஷனர்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துாய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் 30 பேரை கவுரவிக்கும் வகையில், கோயிலின் வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியே அவர்களை அனுமதித்து சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 14ல் விமரிசையாக நடந்தது. இதையொட்டி 20 பெண்கள் உட்பட மாநகராட்சி பணியாளர்கள் 30 பேர் 10 நாட்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.கும்பாபிஷேகம் முடிந்து மறுநாளே அப்பகுதியில் குவிந்து கிடந்த 250 டன் குப்பையை இப்பணியாளர்கள் ஒரே நாளில் அகற்றினர். எனவே அவர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு தரிசனம் செய்ய மாநகராட்சி கமிஷனர் சித்ரா ஏற்பாடு செய்தார்.இதுகுறித்து கோயில் துணை கமிஷனர் சூர்யநாராயணனிடம் தெரிவித்து நேற்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி 30 பேரும் வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்தனர். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், உதவி ஆய்வாளர் திருமால் அவர்களை அழைத்துச் சென்றனர்.சுப்புராஜ் கூறுகையில், பத்து நாட்கள் தொடர்ந்து இப்பகுதியில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு பின் ஒரே நாளில் குப்பையை அகற்றி பாராட்டு பெற்றனர். அவர்களை கவுரவிக்க கமிஷனர் சித்ரா ஏற்பாடு செய்தார். வி.ஐ.பி.,க்கள் வழியாக சென்று தரிசனம் செய்தனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி