மேலும் செய்திகள்
வங்கியில் கடன்: மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
4 hour(s) ago
மதுரை : 'சிறப்பு குறைதீர் கூட்டத்தை வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் தான் நடத்த வேண்டும்,' என, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை, உபகரணங்கள், தொழில் முனைவோர், வேலைவாய்ப்பு பயிற்சி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. மாவட்ட குறைதீர் கூட்டங்களில் இவர்களுக்கு முன்னுரிமை அளித்து கலெக்டர்கள் மனுக்களை பெற்று தீர்வு காண்கின்றனர். இருப்பினும் பல குறைகள் தீர்வு காணப்படவில்லை. சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் வலியுறுத்தின. இதையடுத்து காலாண்டுக்கு ஒருமுறை வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளின் சங்க மாநில நிர்வாகிகளைக் கொண்டும், இரு மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர்கள் தலைமையில் மனுதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகளைக் கொண்டும், கோட்ட அளவில் மாதம் ஒருமுறை துணை கலெக்டர்கள் அல்லது ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையிலும் சிறப்பு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி முறையாக சிறப்புக் கூட்டம் நடப்பதில்லை என்ற குறை மாற்றுத்திறனாளிகளிடம் உள்ளது. இந்நிலையில் ஆக., 22 மாநில சிறப்புக் கூட்டங்களை இனி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் மற்றும் அலுவல்சார் உறுப்பினராக ஆணையர் (சமூகபாதுகாப்பு திட்டம்) தலைமையில் நடத்த வேண்டும் என திருத்தம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க செயலாளர் பாலமுருகன் கூறியதாவது: சிறப்பு குறைதீர் கூட்டம் வருவாய் நிர்வாக ஆணையர் தலை மையில் நடந்தால்தான் காவல், மருத்துவம் உள்ளிட்ட எல்லா துறை அதிகாரிகளும் வருவர். கோரிக்கைக்கும் தீர்வு கிடைக்கும். வருவாய்த்துறை அதிகாரி தலைமையில் கூட்டம் நடந்தும் மாத உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாமல் உள்ளது. காலாண்டு கூட்டமும் ஒன்றரை ஆண்டுகளாக நடக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியாமல் இந்த அரசாணை வந்துள்ளதோ என சந்தேகம் உள்ளது. அவர் வருவாய் ஆணையர் தலைமையில் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றார்.
4 hour(s) ago