மேலும் செய்திகள்
மரக்கடையில் தீ
12-Sep-2024
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பள்ளிச் சிறுவனுக்கு நாய்க் கடிக்கு ஊசி போட செவிலியர் தாமதம் செய்ததால், பள்ளிக்கே சென்று மாணவருக்கு ஊசி போட டாக்டர் உத்தரவிட்டார்.திருப்பரங்குன்றம் கூடல் மலைத்தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் சிவதமிழ் 9. திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி 4ம் வகுப்பு மாணவர். நேற்று காலை சிவதமிழுக்கு நாய்க்கடி ஊசி போடுவதற்காக திருப்பரங்குன்றம் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பணியில் இருந்த செவிலியர் டாக்டர் வந்த பின்பே ஊசி போட முடியும் என கூறினார்.அதேநேரம் பள்ளிக்கு நேரமானதால் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பின்பு 104ல் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்த அவர், மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதாவுக்கும் தகவல் தெரிவித்தார். சுவிதா மற்றும் அதிகாரிகள் உடனே டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.ஞானசேகர் கூறியதாவது: செப்.22 அன்று மேலக்கால் உறவினர் வீட்டுக்கு சென்றபோது, எனது மகனை நாய் கடித்து விட்டது. அங்கு முதல் ஊசி போட்டோம். 2வது ஊசி போட திருப்பரங்குன்றம் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். டாக்டர் வந்த பின்பே ஊசி போட முடியும் என செவிலியர் கூறினார். அதேநேரம் நேரமானதால் பள்ளிக்குச் சென்று விட்டோம்.காலை 10:00 மணிக்கு செவிலியர்கள் எனது வீட்டுக்கே வந்து, டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். 'தாமதமாகும் எனக் கூறியவர் பணி முடித்து வீட்டுக்குச் சென்று விட்டார். இதையடுத்து ஊசி போட தாமதம் கூடாது என அறிவுரை கூறி, ஒரு செவிலியரை பள்ளிக்கு அனுப்பினார். பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எனது மகனுக்கு 2வது ஊசியை செலுத்தினார். நாய்க்கடி பிரச்னை என்பதால் 'ரேபிஸ்' பயத்தில் தகவல் தெரிவிக்க வேண்டியதாகி விட்டது என்றார்.
12-Sep-2024