உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாய் கருவேல மரங்களை ஏலம் விட்ட வனத்துறை

கண்மாய் கருவேல மரங்களை ஏலம் விட்ட வனத்துறை

மதுரை: மதுரை மாவட்ட வனத்துறை அலுவலகம் சார்பில் மதுரை, சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட 13 கண்மாய்களில் வளர்ந்துள்ள நாட்டு கருவேல மரங்களை வெட்டுவதற்கான ஏலம் வனத்துறை அலுவலகத்தில் நடந்தது.மதுரையில் கொடிமங்கலம், சோழவந்தானில் சமயநல்லுார், கோவில்பாப்பாகுடி, வாடிப்பட்டி, வீரபாண்டி, தோடனேரி1, 2, தேனுார், சோழவந்தான் கண்மாய்கள், திருமங்கலத்தில் வடகரை, எழுமலை, உசிலம்பட்டியில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம் கண்மாய்களில் வனத்துறை சார்பில் ஏற்கனவே நாட்டுகருவேல மரங்கள் நடப்பட்டிருந்தன. அவற்றை வெட்டுவதற்கான ஏலம் மாவட்ட வனஅலுவலர் குருசாமி தபாலா தலைமையில் நடந்தது. 67 பேர் பங்கேற்றனர். கண்காணிப்பாளர் ஜெயராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் கிடைக்கும் வருவாயில் 75 சதவீதம் வனத்துறைக்கும் மீதித்தொகை கண்மாய்களுக்கு சொந்தமான ஊராட்சி அல்லது நீர்வளத்துறைக்கு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை