உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.60 வழிப்பறி செய்தவர் 27 ஆண்டுகளுக்கு பின் கைது

ரூ.60 வழிப்பறி செய்தவர் 27 ஆண்டுகளுக்கு பின் கைது

மதுரை:மதுரை, அண்ணாநகர் ஜக்காதோப்பைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 55. இவர், 1997ம் ஆண்டு, 60 ரூபாய் வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலைமறைவானார்.இந்நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க, சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சந்தானபாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோர் பழைய வழக்குகளை ஆய்வு செய்தனர்.ஜக்காதோப்புக்கு சென்று பன்னீர்செல்வம் குறித்து விசாரித்தபோது, சிவகாசி பகுதியில் குடும்பத்துடன் வசிப்பது தெரிந்தது. அங்கு உள்ளூர் போலீசார் மற்றும் தெப்பக்குளம் போலீசாருடன் சென்று விசாரித்தனர். அங்குள்ள ஒயின்ஷாப்பில் வேலை செய்த பன்னீர்செல்வத்தை கண்டுபிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

vision vision
நவ 10, 2024 07:38

மன்னித்து விட்டால் கூட இவ்வளவு செலவு ஆகிருக்காது .. உருப்படியா வேலை இருந்தா பாக்கலாம் .. மக்களோட வரிப்பணம் எப்படி எல்லாம் செலவு கணக்கு காட்றாங்க ..


Ganesh Kumar
நவ 10, 2024 01:53

அடா, அடா என்ன ஒரு முக்கியமான செயல் - காவல் துறையும், நீதி துறையும் செய்துள்ளார்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களை கண்டு கொள்ளாமல் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அரசு பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் இவர்கள் வெக்க பட வேண்டாமா? ஐயோ பாவம் மக்கள்


முக்கிய வீடியோ