உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாலும் போச்சு... பணமும் போச்சு...

பாலும் போச்சு... பணமும் போச்சு...

மதுரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெப்போக்களுக்கு தினம் 5 லட்சம் பால் பாக்கெட்டுகளை ஆவின் வினியோகிக்கிறது. இதற்காக 70 வழித்தடங்களில் ஒப்பந்த வாகனங்கள் இயக்கப்படுகின்றன. டெப்போக்களுக்கு அதிகாலை 5:00 மணிக்குள் வினியோகம் முடிந்து விடும். ஆனால் சில நாட்களாக இரண்டு மணிநேரம் தாமதமாக வினியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதனால் பாக்கெட்டுகளின் குளிர்த்தன்மை குறைந்து பால் கெட்டுப்போகும் சூழல் ஏற்படுகிறது. தாமதம் ஆவதால் தனியார் பாலை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். விற்பனையாகாத பாக்கெட்டுகளை ஆவின் திரும்ப பெறாததால் டெப்போ முகவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறுகின்றனர்.அவர்கள் கூறியதாவது: ஆவின் மண்டல அலுவலங்களில் முன்பணம் செலுத்திய பின் தான் பால் பாக்கெட்டுகளை பெற முடியும். தற்போது ஆவினில் மார்க்கெட்டிங், பண்ணை பிரிவு அதிகாரிகள் கவனக்குறைவால் தினம் பாக்கெட்டில் பால் நிரப்பும் பணி தாமதமாகிறது. வழக்கமாக இப்பணிகள் முன்கூட்டியே முடிந்தபிறகே பால் பாக்கெட்டுகளை நன்றாக குளிர்த் தன்மை செய்து 'டிரே'யில் அடுக்கி டெப்போக்களுக்கு கொண்டு செல்லப்படும்.ஆனால் பால் நிரப்புவது தாமதமாவதால், பாக்கெட்டுகளை போதிய அளவில் குளிரூட்டாமல் நேரடியாக டெப்போக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் குளிர்த்தன்மை குறைந்து பல இடங்களில் பால் கெட்டுப் போகிறது.அந்த பாக்கெட்டுகளை ஆவின் திரும்ப பெறுவது இல்லை. அந்த நஷ்டம் முகவர்கள் தலையில் தான் விழுகிறது. இதுகுறித்து புகார் தெரிவிக்க மண்டல அலுவலக எண்களில் தொடர்புகொண்டால் அழைப்பை ஏற்பதில்லை. தாமத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்றனர்.பொதுமேலாளர் சிவகாமி கூறுகையில், இரண்டு வழித்தடங்களில் தாமத வினியோக பிரச்னை இருந்தது. அனைத்து பிரிவு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை