மேலும் செய்திகள்
உலா வரும் தெருநாய்கள்; அச்சத்தில் பொதுமக்கள்
28-Jun-2025
மேலுார்: மேலுார் நகர் முழுவதும் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் மக்கள் ரோட்டில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலுார் வட்டார மக்கள் தங்கள் கல்வி, தொழில், அலுவலகம் உட்பட அனைத்து வேலைகளுக்கும் தினமும் மேலுாருக்கு வந்து செல்கின்றனர். அதனால் எந்நேரமும் நகர் முழுவதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. நகரில் நாள் முழுவதும் ரோட்டோரம் செயல்படும் துரித உணவக கழிவுகளை உண்பதற்காக ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் ரோட்டில் அச்சத்துடன் நடமாடுகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ரோட்டில் சுற்றித் திரியும் வெறிநாய்கள் நடந்து செல்வோரை விரட்டி கடிக்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியோர் வரை ரோட்டில் நடமாட அச்சப்படுகின்றனர். பல தெருக்களில் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். நாய்கள் ரோட்டின் குறுக்கு நெடுக்காக ஓடுவதால் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். நாய்களின் லொள்ளு தாங்காமல் நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. இப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். என்றனர்.
28-Jun-2025