உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீசிற்கு புகழ் கிடைத்தது

போலீசிற்கு புகழ் கிடைத்தது

மதுரை: மதுரை நகர் போலீஸ் துப்பறியும் நாய் படை பிரிவிற்கு புதிதாக பிறந்த 40 நாட்களே ஆன லேபரடார் ரக நாய்க்குட்டி வாங்கப்பட்டுள்ளது. இதற்கு 'புகழ்' என கமிஷனர் லோகநாதன் பெயர் சூட்டினார்.ஏற்கனவே இப்பிரிவில் 7 நாய்கள் வெடிகுண்டு கண்டுபிடிப்பு, குற்ற வழக்குகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த 'புகழ்' போதை பொருட்களை கண்டுபிடிக்க பயிற்சி எடுக்க உள்ளது. நிகழ்ச்சியில் உதவிகமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் தர்மர், எஸ்.ஐ., ராஜேந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !