நுாறாண்டுகளைக் கடந்த ‛வேண்டுதல் மணி துாண்
மதுரை : மேலுார் தெற்கு தெரு பெரிய மந்தை வீரன் கோயில் முன்பாக நுாறாண்டுகளை கடந்த, 'வேண்டுதல் மணி' கட்டும் கல்துாண்கள் கண்டறியப்பட்டன.சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் அறிவுசெல்வம் கூறியதாவது: இங்கு 7 மந்தைவீரன் கோயில்கள் உள்ளன. இதில் பெரிய மந்தை வீரன் கோயில் முன்புறம் மணிகளை கட்டும் வகையில் 25 கல்துாண்கள் உள்ளன. இரண்டு துாண்களுக்கு இடையே இரும்பு உருளை வைக்கப்பட்டு அதில் வேண்டுதல் மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.ஒரு துாணில் 1926, பிப்.24 குரோதி வருசம் மாசி மாதம் 27 அவராபளிநல்லுார் முத்து அம்பலம் மகன் அண்டபரா' என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது நுாறாண்டுகளை கடந்தது என்றனர்