உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூக்கள் விலை குறைந்தது

பூக்கள் விலை குறைந்தது

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகை உட்பட பல்வேறு பூக்களின் விலை குறைந்தது.நேற்று முன்தினம் கிலோ ரூ.1200க்கு விற்ற மல்லிகை நேற்று காலை ரூ.ஆயிரத்திற்கும் மதியம் ரூ.700க்கும் விற்பனையானது. முல்லை, பிச்சிப்பூ கிலோ ரூ.450 முதல் ரூ.500க்கும் கனகாம்பரம் ரூ.500க்கு விற்கப்பட்டது. பன்னீர்ரோஸ் 300, அரளி, செவ்வந்தி ரூ.200, ரோஸ் 180, பட்டன்ரோஸ் 160, சம்பங்கி 100, கோழிக்கொண்டை 80, மரிக்கொழுந்து 60, செண்டுமல்லி 50, தாமரை (ஒன்று ரூ.7க்கு விற்பனையானது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை (மே 12) முன்னிட்டு மே 11ம் தேதி பூக்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை