உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்

மருத்துவ வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்

சோழவந்தான் : திருவேடகத்தில் போதிய மருத்துவ வசதியின்றி பொது மக்கள் சிரமப்படுகின்றனர். அப்பகுதி பாண்டிச்செல்வி கூறியதாவது: திருவேடகம், தச்சம்பத்து, திருவேடகம் காலனி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள துணை சுகாதார நிலையம் சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. வாரம் ஒருமுறை மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் வந்து மருத்துவம் பார்த்துச் செல்கின்றனர். மற்ற நாட்களில் நோயாளிகள் 5 கி.மீ., தொலைவில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனை, மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அருகில் தனியார் மருத்துவமனைகளும் இல்லாததால் மிகுந்த சிரமப்படுகிறோம். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை