மேலும் செய்திகள்
மாணவர்களால் நிரம்பிய மதுரை புத்தகத் திருவிழா
09-Sep-2025
மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி), பொது நுாலக இயக்ககம், பள்ளிக் கல்வித்துறை சார்பில், புத்தகத்திருவிழா நடந்து வருகிறது. மக்கள் பயனுள்ள வகையில் கழிக்க, 231 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்துள்ளன. மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமில்லாமல் குடும்பத்துடன் வரும் வாசகர்களின் கூட்டத்தால் தமுக்கமே விழாக்கோலமாக உள்ளது. இங்கு குழந்தைகளுக்கான காமிக்ஸ் முதல் ஆன்மிகம், தலைவர்கள் வரலாறு, கவிதை தொகுப்புகள், நாவல்கள், பொது அறிவு, போட்டித்தேர்வு தொடர்பான புத்தகங்கள் என அனைத்து துறை சம்பந்தமான புத்தகங்களும் கிடைக்கும். புத்தகங்களை 10 சதவீத தள்ளுபடி விலையில் வாங்கலாம். பள்ளி மாணவர்கள் அடையாள அட்டை காண்பித்து 5 சதவீத கூடுதல் தள்ளுபடி பெறலாம். செப்., 15 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை புத்தக கண்காட்சி நடக்கிறது.
09-Sep-2025