உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கரடு முரடான ரோடு

கரடு முரடான ரோடு

வாடிப்பட்டி: ஆண்டிபட்டி ஊராட்சி சின்னமநாயக்கன்பட்டியில் ரோட்டை சீரமைக்க வேண்டும்’’ என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள தார்ரோடுகள் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக காட்சியளிக்கின்றன. தெருக்களில் அமைக்கப்பட்ட 'பேவர்பிளாக்' கற்கள் பல இடங்களில் கீழிறங்கி பள்ளமாகிவிட்டது. பல இடங்களில் மண் ரோடு மழையால் சேறும் சகதியுமாகி விட்டது. இதனால் பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர் சிரமமடைகின்றனர். பலர் தட்டுத் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து ரோட்டை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி